search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in sales of flowers"

    • சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • கடந்த சில நாட்களாக முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதியாக சரிந்து விற்கப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதியாக சரிந்து விற்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மார்கழி மாதம் நேற்று பிறந்துள்ளது. இதையொட்டி கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    இதன் காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து, விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 800- க்கு விற்ற குண்டு மல்லி இன்று ரூ.1000- க்கு விற்பனை ஆனது. ரூ.500- க்கு விற்ற முல்லை பூ இன்று ரூ.800- க்கு விற்பனை ஆனது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில பூக்களின் விலை குறைந்தும் உள்ளது. தொடர்ந்து மார்கழி மாதம், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சமயத்தில் விற்பனை களைகட்டும். இன்றைய பூக்கள் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) வருமாறு:-

    குண்டுமல்லி-ரூ.1000, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லி-ரூ.400, காக்கட்டான்-ரூ.200, கலர் காக்கட்டான்-ரூ.200, மலைக்காக்கட்டான் ரூ.160, அரளி - ரூ. 120, வெள்ளை அரளி-ரூ.120, மஞ்சள் அரளி-ரூ.120,செவ்வரளி-ரூ. 160, ஐ.செவ்வரளி-ரூ.160, நந்தியா வட்டம்-ரூ.200, சி.நந்தியா வட்டம்-ரூ.200,சம்மங்கி -ரூ.40, சாதா சம்மங்கி -ரூ.60.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

     கார்த்திகை தீபத்திருவிழா நாளை (6- ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள், பெண்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யவும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இன்று சேலத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள், மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விற்பனை வழக்கத்தைவிட விற்பனை அதிகரித்து காணப்பட்டது. 

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-

    மல்லிகை - ரூ.1600, முல்லை - ரூ.1200, ஜாதி மல்லி - ரூ.600, காக்கட்டான் - ரூ.500, கலர் காக்கட்டான் - ரூ.500, சி.நந்தியா வட்டம் - ரூ.140, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.200, வெள்ளை அரளி - ரூ.200, மஞ்சள் அரளி - ரூ.200, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.140, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாரத்தில் எதிர்வரும் நாட்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×