என் மலர்
நீங்கள் தேடியது "Immediately informed the railway police"
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருநெல்வேலி அடுத்த தலைவன்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜா குணசேகரன்(வயது 40).இவர் மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
நேற்று மாலை இந்த ரயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தபோது திடீரென ராஜா குணசேகரன் நடைமேடையில் இறங்கி வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக பயணிகள் உடனடியாக ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர்.
பின்னர் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்க்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.






