என் மலர்
நீங்கள் தேடியது "Illegal houses sealed"
- கட்டடங்களை பாா்வையிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
- சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமீறலை உறுதி செய்தனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பாா்வையிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், குன்னூா் ஸ்டேன்ஸ் சாலையில் உள்ள தனியாா் குடியிருப்பு ஒன்றில் இரண்டு தளத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு கூடுதலாக ஒரு தளம் கட்டப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமீறலை உறுதி செய்தனா்.
தொடா்ந்து, அந்த குடியிருப்பை மூடி அதிகாரிகள் 'சீல்' வைத்தனா்.






