என் மலர்
நீங்கள் தேடியது "husband's 2nd marriage"
- தனது கணவருக்கு அருகில் வசிக்கும் உறவினர்கள் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர்.
தேனி:
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி ஷீலா (வயது 35). செல்லப்பாண்டிக்கு அருகில் வசிக்கும் உறவினர்களான மயிலம்மாள், செல்லம்மாள், சூர்யா, ஈஸ்வரபாண்டியன் ஆகியோர் சேர்ந்து 2-ம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதற்கு ஷீலா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று செல்லப்பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வீடு புகுந்து ஷீலாவை கடுமையாக தாக்கினர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவைப் பூட்டிக் கொண்டனர்.
படுகாயமடைந்த ஷீலா தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






