என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband who chased his wife"

    • திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
    • தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராமலிங்கபுரம் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் லதா (28). இவருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    திருமணமான சில வருடங்களிலேயே மனைவியின் நகைகள் அனைத்தையும் கணவர் வாங்கி அடகு வைத்துவிட்டார். மேலும் தான் புதிதாக கட்டிவரும் வீட்டிற்காக கூடுதல் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி கணவர் மற்றும் மாமனார் செல்லம், உறவினர் ஜெயந்தி ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வரதட்சணை வாங்கி வராததால் லதாவை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.

    இதுகுறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் லதா புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய ராமச்சந்திரன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×