search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband murder in tirupattur"

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வாலிபர் கொலையில் மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31). திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார்.

    ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

    பணி முடிந்து வீடு திரும்பிய ராஜ்குமார், அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிலருடன் பேசி கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரமேசை தேடி சென்றனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. மேலும் ரமேசுக்கும், கொலையுண்ட ராஜ்குமாரின் மனைவி கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதனையடுத்து கவுசல்யாவை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    தலைமறைவாக இருந்த ரமேஷ், அவரது நண்பர் துளசிராமன் ஆகியோரை தனிப்படை போலீசார் இன்று காலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கவுசல்யா, அவரது கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ராஜ்குமார் இல்லாத நேரங்களில் கவுசல்யா ரமேஷ் தனிமையில் சந்தித்துள்ளனர். அடிக்கடி போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. அவர் கவுசல்யாவை கடுமையாக கண்டித்தார்.

    இதனால் கவுசல்யாவுக்கு ரமேஷை சந்திக்க முடியவில்லை. கணவன் உயிரோடு இருந்தால் ரமேஷை சந்திக்க முடியாது எனவே கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். ராஜ்குமாரை கொலை செய்து விடுமாறு ரமேஷிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்காதலன் ரமேஷுடன் கவுசல்யா

    ராஜ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனை பயன்படுத்தி அவரை கொல்ல முடிவு செய்தனர். ரமேஷின் நண்பர் கவுதமபேட்டையை சேர்ந்த துளசிராமன் சம்பவத்தன்று ராஜ்குமாரை தனியாக அழைத்து சென்று மதுவாங்கி கொடுத்தார். ராஜ்குமாரும் மதுகுடித்தார். அவருக்கு போதை உச்சத்துக்கு ஏறியது.

    அப்போது திட்டமிட்டபடி ரமேஷ் அங்கு சென்றார். அப்போது தான் இவர்களை சிலர் பார்த்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ராஜ்குமாரை ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த கவுசல்யா, ரமேஷ், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×