என் மலர்
நீங்கள் தேடியது "Husband commits suicide in grief over wife's death"
- போலீசார் விசாரணை
- ஒடுகத்தூர் அருகே சோகம்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த பெரியஏரியூர் கிராமத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 43) இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். இவரது மனைவி கடந்த 3 மாதத்திற்கு முன்பாக உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
மனவேதனையில் வந்த கோபி இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவ்வூரில் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. அப்போது மனமுடைந்த கோபி அருகே இருந்த மாட்டு கொட்டைகைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த அவரின் மகன் விக்னேஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோபியை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து முதலுதவி அளிக்கப்பட்டது.
உயிருக்கு போராடி கொண்டு இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






