search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hundreds missing"

    லாவோஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணை இடிந்ததில் 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். #Laos #LaosDamCollapse
    வியண்டே:

    தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அணையின் கட்டுமானப்பணி 90 சதவிகிதம் முடிந்த நிலையில், அடுத்தாண்டு திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது.

    இந்நிலையில், நேற்று மாலை அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.



    சுமார் 6600 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள், தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
    ×