search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HUAWEI P20 Lite 2019"

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.



    ஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு பி20 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் ஹூவாய் பி20 லைட் 2019 எடிஷன் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.

    புகைப்படங்களின் படி 2019 ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருக்கின்றன.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் FHD பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், கிரின் 710 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார், 2 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



    ஹூவாய் பி20 லைட் 2019 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 
    - 2 எம்.பி. + 2 எம்.பி. கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹூவாய் பி20 லைட் 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், கிரேடியண்ட் புளு மற்றும் சார்மிங் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 314 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,130) முதல் 370 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.26,080) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ×