என் மலர்
நீங்கள் தேடியது "Hoarding and selling liquor packets"
- போலீசார் ரோந்து
- மது பாக்கெட்கள் பறிமுதல்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் போலீசார் முருகன் சினிமா தியேட்டர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி கள்ளத்தனமாக கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் பாவடை தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து மது பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






