search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HMS"

    • பீஸ்‌ரேட் தொழிலாளர்களுக்கு வாங்கிய சம்பளத்தை கணக்கீட்டு வழங்க வேண்டும்.
    • பஞ்சப்படி ரூ.185 பயணப்படி ரூ.25 சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருப்பூர் :

    எச். எம். எஸ்., தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் கூட்டம் திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் பனியன் மற்றும் விசைதறி உட்பட அனைத்து பிரிவு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விரைவாக போனஸ் வழங்க வேண்டும்.

    கடந்த ஆண்டை விட உயர்த்தி வழங்க வேண்டும். பீஸ்‌ரேட் தொழிலாளர்களுக்கு வாங்கிய சம்பளத்தை கணக்கீட்டு வழங்க வேண்டும். சம்பள உயர்வு ஒப்பந்தப்படி அடிப்படை 5 சதவீதம் உயர்த்திட வேண்டும். பஞ்சப்படி ரூ. 185, பயணப்படி ரூ. 25 சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் முத்துசாமி, மாவட்டத் தலைவர் முருகன், ஜெயராமன்,ரகுபதி, சந்தோஷ், மதன், சிவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    ×