என் மலர்
நீங்கள் தேடியது "highlights Karunanithi"
- தமிழகத்தில் நடைபெறுவது விரோத ஆட்சியாகும், அவர்களது இயலாமையால் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகின்றனர்.
- அண்ணாவின் பெயரை மறைத்து கருணாநிதி பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
நத்தம்:
நத்தத்தில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காந்தி கலையரங்கத்தில் நடந்தது. ஒன்றிய அவைத் தலைவர் பிரதி கவுண்டர் தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் , ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் முத்தையா, நகர அவைத் தலைவர் ஷேக் ஒலி, மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, ஜெயபாலன், நகர் பேரவை செயலாளர் ஷேக் தாவுது, மாவட்ட கவுன்சிலர்கள் சின்ன கவுண்டர், பார்வதி மணிகண்டன், விவசாய அணி செல்லையா, பேச்சாளர் சுல்தான் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசியதாவது, தற்போது தமிழகத்தில் நடைபெறுவது விரோத ஆட்சியாகும், அவர்களது இயலாமையால் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வருகின்றனர். அண்ணாவின் பெயரை மறைத்து கருணாநிதி பெயரை முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரும், அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் அண்ணாவின் புகழை பெருமைப்படுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதைக் காத்து வருகிறார். இந்த நிலையில் தற்போதைய அரசு அண்ணாவின் பெயரை மறந்து விழா நடத்தி வருகின்றனர்.
தற்போது உள்ள சூழ்நிலையில் சனாதனம் என்ற பிரச்சனையை கையில் எடுத்து மக்களை திசை திருப்பி வருகின்றனர். தி.மு.க.வின் பித்தலாட்ட அரசியல் மக்களிடம் இனி எடுபடாது. மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநில மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். அனைத்து மக்களுக்கும் விழாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முதல்-அமைச்சர் நடுநிலையாக செயல்படுவதில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது.
இதற்கு காரணம் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் கண்ட இடங்களிலும் தாராளமாக நடக்கிறது. இதனால் தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் அரசு பாதுகாப்பு உத்தரவாதம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நகர நிர்வாகி கருப்பையா நன்றி கூறினார்.






