என் மலர்

  நீங்கள் தேடியது "High police officers order to put in jail"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 6-ம் வகுப்பு மாணவிக்கு சாஸ்திரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டார்.
  • அம்மா பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாஸ்திரியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

  சேலம்:

  சேலம் கன்னங்குறிச்சி செட்டிச்சாவடி பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சாஸ்திரி (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை சத்யாநகர் பகுதியில் உள்ள மலை அடிவாரம் பகுதிக்கு விளையாட சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு சாஸ்திரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டார்.

  தர்ம அடி

  உடனே பொதுமக்கள் அங்கு திரண்டு, சாஸ்திரியை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  இதையடுத்து, அம்மா பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சாஸ்திரியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

  முதியவர் கைது

  சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மக்பூல் (வயது 73). இவர் 4 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சில்மிஷம் செய்தார்.இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் மக்பூலை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.மேலும் அவரை, உடனடியாக ெஜயிலில் அடைக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து போலீசார், மக்பூலை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

  ×