search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Herb collection"

    • மானிய விலையில் வழங்கப்படுகிறது
    • ஆதார் கார்டு, புகைப்படத்துடன் வந்து பெற்று செல்லலாம்

    திருப்பத்தூர்:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை திருப்பத்தூர் வட்டார உதவி இயக்குநர் கயல்விழி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு உடல் பாதிப்புகளை போக்குவதில், துளசி, கற்ப்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை பிரண்டை, கீழாநெல்லி உள்ளிட்ட மூலிகை செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்க, 'ஹெர்பல் கார்டன் கிட் வழங்க திட்டமி டப்பட்டுள்ளது.

    ஆடாதொடை, கற்றாழை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா உள்ளிட்ட, செடிகள் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது. வகைக்கு, இரு செடிகள் என, மொத்தம், 20 செடிகள் வழங்கப்படும். இதனுடன் செடிகள் வளர்க்கும் பைகள்10, 20 கிலோதென்னை நார் கழிவு கட்டிகள் மற்றும் மண்புழு உரமும் வழங்கப்படும்.

    ஒரு தொகுப்பின் விலை,, 1500 ரூபாய் ஆகும். மானியம் போக, 750 ரூபாய்க்கு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில், கிட் ரிஜிஸ்ட்ரேஷன் பக்கத்தில் விபரங்களை பதிவு செய்யலாம், அல்லது திருப்பத்தூர் தோட்டக்கலைதுறை அலுவலகத்தை, 7339165526/ 9361939681 என்ற எண்ணில் அழைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

    நேரில் வருவோர், ஆதார் நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் புகைப்ப டத்துடன் வந்து, ஹெர்பல் கிட்டை பெற்று செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×