என் மலர்
நீங்கள் தேடியது "Helicopter Landing"
- பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது,
- திருவனந்தபுரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே வண்டிப்பெரியாறு சத்திரம் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு என்.சி.சி. விமானம் ஓடுதள கட்டுமானப்பணிகள் தொடங்கியது. இந்த தளத்தில் ஏர்ஸ்டிரிப் மூலம் ஆண்டு தோறும் 1000 என்.சி.சி.ஏர்விங் கேட்டர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய விமானம் இங்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. பருவமழை காலத்தின்போது இடுக்கி மாவட்டத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு சத்திரம் விமான ஓடு பாதையை பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராயுமாறு மாவட்ட நிர்வாகம் என்.சி.சி. மற்றும் கேரள அரசுக்கு கடிதம் எழுதியது.
இதன் அடிப்படையில் பேரிடர் மீட்பு பணிகளுக்கான சாத்திய கூறுகளை ஆராயும் ஒரு பகுதியாக விமான படையின் ஹெகாப்டர் சத்திரம் விமான ஓடுதளத்தில் தரை இறக்கி சோதனை செய்யப்பட்டது.
இதற்காக கோவை சூளூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டது. திருவனந்த புரம் வந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து சத்திரம் விமான ஓடுதளத்தை 3 முறை சுற்றியபின்னர் வெற்றிகர மாக தரை இறக்கப்பட்டது. இயற்கை பேரிடர் ஏற்படும் போது விமானப்படை உதவியுடன் பொதுமக்களை மீட்கவும், மீட்பு படைகளை விரைவாக கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆய்வு குழுவால் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை உயர் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்படும் என குரூப் கேப்டன் சீனிவாசன் தெரிவித்தார்.






