என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Helicopter circling"

    • கோவைைய சேர்ந்த தனியார் நிறுவனம் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை கொண்டு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியது.
    • கொடைக்கானல் மலை ப்பகுதியில ஒரு ெஹலி காப்டர் பலமுறை குடியி ருப்பு பகுதியில் தாழ்வாக பறந்து சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை கவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. கோவைைய சேர்ந்த தனியார் நிறுவனம் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை கொண்டு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியது.

    அவ்வப்போது ஹெலி காப்டரில் சுற்றுலா பயணி களை அழைத்துவந்து கொடைக்கானல் மலை ப்பகுதியை சுற்றி காண்பித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று கொடைக்கானல் மலை ப்பகுதியில ஒரு ெஹலி காப்டர் பலமுறை குடியி ருப்பு பகுதியில் தாழ்வாக பறந்து சென்றதால் பர பரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சுற்றுலா பயணிகளை ஏற்றி க்கொண்டு அடிக்கடி ஹெலிகாப்டர்கள் வான்ப குதியில பறந்து வருகிறது.

    ஆனால் இந்த ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக வந்தது. அதில் அமர்ந்திருந்தவர்கள் தெரியும் அளவிற்கு மிகதாழ்வாக பறந்ததால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது.

    பின்னர் தரையிறங்க இடம் இல்லாததால் அந்த ஹெலிகாப்டர் மீண்டும் அங்கிருந்து சென்றுவிட்டது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டதாக கோவையை சேர்ந்த தனி யார் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அடிக்கடி இது போல் தாழ்வாக பறக்கும் ெஹலிகாப்டர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே முறையான பயிற்சி பெற்றபின் அனுமதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர். இந்த ஹெலிகாப்டர் பழனி பகுதியிலும் வட்டமடித்து சென்றது.

    ×