search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Recips"

    வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு - ஒரு கப்,
    பச்சை பயறு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 2
    தோல் சீவிய இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    நெய் - 2 டீஸ்பூன்
    தண்ணீர் - 4 கப்,
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :


    நெய் - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்



    செய்முறை :


    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை நன்கு கழுவி, சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற விடவும். பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டவும்.

    பாசிப்பருப்பை கழுவி பத்து நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.

    கம்பை மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும்.

    குக்கரில் நெய் விட்டு உருக்கியதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

    பிறகு அரைத்த கம்பு, பாசிப்பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.

    அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கிளறி மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.

    வாணலியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கிச்சடியின் மேலே ஊற்றி கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கம்பு கிச்சடி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×