என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health promotion"

    • விக்கிரவாண்டியில் அனைத்து வார்டுகளிலும் சுகாதார மேம்பாடு பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.
    • மன்ற துணைத்தலைவர் பாலாஜி, செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் அலுவல கத்தில்பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார்.மன்ற துணைத்தலைவர் பாலாஜி, செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர்.இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புடன் வளர்ச்சி திட்ட பணிகள் செய்வது குறித்தும், அனைத்து வார்டுகளில் சுகாதார நடவடிக்கைகள் மேம்பாடு செய்வது குறித்தும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தி ல்கவுன்சிலர்கள் கனகாசக்திவேல், சுரேஷ், ரமேஷ், ரேவதி வீராசாமி,புஷ்பராஜ், ஆனந்தி, வீரவேல், சுதா பாக்கியராஜ், பவானி ராஜேஷ்,சுபா சிவஞானம் , வெண்ணிலா காத்தவராயன் , பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பா ர்வையாளர் ராமலிங்கம்,கனனி ஆப்ரேட்டர் கீதா உட்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×