என் மலர்
நீங்கள் தேடியது "He went to the hospital for treatment"
- சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்
- போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை (வயது 78). இவர் ஆரணியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் சிகிச்சை முடிந்து ஆரணி- திருவண்ணாமலை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
போளூரில் இருந்து ஆரணி நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் நடந்து கொண்டிருந்த வெள்ளை மீது மோதியது.
இதில் அவரது கால் நசுங்கி எலும்பு முறிவு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வெள்ளையை மீட்டு ஆரணி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வெள்ளை ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் புது மல்லவாடியை சேர்ந்த முனியப்பன் (54), என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.






