என் மலர்
நீங்கள் தேடியது "He was working in a private hotel."
- மனஉளைச்சலில் காணப்பட்டார்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் ஜலில் நகர் மோட்டுக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அப்பு சுபியான் (வயது 21). இவர் கர்நாடகா மாநிலம் மைசூரில் ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இவருடன் உமராபாத் பகுதியை சேர்ந்த இவருடைய பெரியப்பா மகன் ஜாவித் (24) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இருவரும் ஒரு இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இதனால் அப்பு சுபியான் மனஉளைச்சலில் காணப்பட்டார்.
நேற்று இரவு 10 மணிக்கு அப்பு சுபியான் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






