என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He provided the couch"

    • பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வினியோகம்
    • மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சுண்ணாம்பு கார தெருவில் இன்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார்.

    கார்த்திகேயன் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் கலந்து கொண்டு பேசுகையில்:-

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும்.

    பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் மண்ணிற்குள் புதைந்து மண்ணின் தன்மையை கெடுத்து விடுகிறது. குப்பைகளை கால்வாய்களில் கொட்டாமல் குப்பை சேகரிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனியாக வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மாநகராட்சி கவுன்சிலர் வி எஸ் முருகன் உட்பட மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×