என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He looked distressed"

    • 2 குழந்தைகளை தவிக்கவிடு சென்றார்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த புலிவலம் சேர்ந்தவர் முரளி (வயது 25). தொழிலாளி. இவரது மனைவி சினேகா (22). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

    கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா மன உளைச்சலில் காணப்பட்டார். கடந்த 26 -ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் முரளி எழுந்து பார்த்தார்.

    அப்போது சினேகா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கம், உறவினர் வீடுகளில் தேடினார். அவர் கிடைக்காததால் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை தேடி வருகின்றனர்.

    ×