என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "he lay down for a while and took a rest."

    • நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை
    • போலீசார் விசாரணை

    வாலாஜா

    வாலாஜா அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன்(64) கூலி தொழிலாளி. இவர் அதே கிராம பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துள்ளார்.

    பின்னர் நீண்ட நேரம் ஆகியும் பணிக்கு திரும்பாததால் மற்றவர்கள் பரசுராமனை எழுப்பி பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது.

    பரசுராமனை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பரசுராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து, கடுமையான வெயிலினால் பாதிக்கப்பட்டதால் பரசுராமன் இறந்துவிட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×