என் மலர்
நீங்கள் தேடியது "He gave a show to the devotees"
- வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடந்தது
- மூலிகை கொண்டு வேள்வி பூஜை நடைபெற்றது
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து மூலவர் லிங்கபைரவி அலங்காரத்தில், உற்சவர் அம்மன் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்கா ரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும் வளாகத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலம் பெற வாழ்க்கை செழிக்க பலவகையான மூலிகை கொண்டு வேள்வி பூஜை நடைபெற்றது.
இரவு பக்தர்கள் அம்மனை தோளில் சுமந்தவாறு கோவிலை மூன்று முறை சுற்றி வந்து ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






