என் மலர்

  நீங்கள் தேடியது "HC Chief Justices"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர். #IndiraBanerjee #SCJudges
  புதுடெல்லி:

  சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி வினித் சரண், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது. ஜனாதிபதி கையொப்பமிட்டதும், புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  புதிதாக நியமிக்கப்பட்டவர்களோடு சேர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்திரா பானர்ஜி நியமனத்தால் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பானுமதி மற்றும் இந்து மல்கோத்ரா ஆகிய பெண் நீதிபதிகள் உள்ளனர். #IndiraBanerjee #SCJudges

  ×