search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hajj Journey"

    • இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.
    • விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    புதுடெல்லி:

    சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஆண்டு தோறும் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் முழுவதும் இருந்து அவர்கள் அங்கு சென்று தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்றுவார்கள்.

    இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஹஜ் பயண ஒதக்கீடு 1.75 லட்சமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இன்று ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தாகுகிறது.

    வெளியுறவு துறை இணை மந்திரி முரளீதரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் விவகாரகளுக்கான இணை மந்திரி ஸ்மிருதிஇராணி ஆகியோர் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

    சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துறை மந்திரி டாக்டர் தவ்பீக் பின் பஸ்வான் அல் ரபியாவை அவர்கள் சந்திப்பார்கள். விமான சேவை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தரப்பிலும் பேசப்படுகிறது.

    ×