என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hair Offering Hall"

    • அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ரூ. 89 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது.

    அன்னதான கூடம்

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து ரூ. 42.5 லட்சத்திற்கு புதி யதாக கட்டப்பட்ட அன்னதான கூடத்தை திறந்து வைத்தார். மொத்தம் ரூ. 1.32 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடக்கம், மற்றும் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அணைக்கட்டு ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபபிரியா, துணைத்தலைவர் வசிம்அக்ரம் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி கணக்காளர் சரவண பாபு உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

    இதனை தொடர்ந்து செதுவாலை கிராமத்தில் புதிய மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டுவதற்கு நந்தகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    ×