என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H. Vasantakumar Memorial"

    • காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

    பல்லடம் : 

    முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், காங்கிரஸ் கமிட்டி வர்த்தக பிரிவு நிறுவன தலைவரும், முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமாரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் கடைவீதி சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் வசந்தகுமாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரது நினைவை போற்றும் வகையில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் மணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே. பழனிவேல், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்ததனர்.

    காங்கிரஸ் மகளிர் அணி சுந்தரி முருகேசன் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் நரேஷ் குமார், வர்த்தகப்பிரிவு பல்லடம் நகரத்தலைவர் சுரேஷ், பொங்கலூர் வட்டாரத்தலைவர் ராமச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது மற்றும் அர்ஜுனன், கனகராஜ், சுரேஷ்குமார், பொங்கலூர் ராமு, சுரேஷ், பிரதீப், ராஜா, தமிழரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×