search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutkha sales"

    வேளாங்கண்ணியில் குட்கா மற்றும் பான்மசாலா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutkha

    நாகப்பட்டினம்:

    உலக சுற்றுலா தலமான வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றியுள்ள கடைகளில் குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் எஸ்.பி., உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி காவல் சரகத்தில் கடந்த ஒருவார காலமாக தனிப்படை போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலயத்தின் அருகே உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வேளாங்கண்ணி கீழத்தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் மணிகண்டன், கத்திரிப்புலம் பனையடி குத்தகை முருகையன் மகன் குமரவேல், வேளாங்கண்ணி ஆரியநாட்டுத் தெருவை சேர்ந்த முனியப்பன் மகன் சகாயராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் புறங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்து வந்த நாகப்பட்டினம் வெளிப்பாளையம் மறைமலை நகரை சேர்ந்த தாஜீதீன் என்பவரையும் கைது செய்தனர். 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். #Gutkha

    ×