search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gums and baby teeth"

    • 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன.
    • சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்த பற்கள் முளைக்கும். இருப்பினும் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

    குழந்தைக்கு பல் வளரும் வயது:

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத்தொடங்குகின்றன.

    அறிகுறிகள்:

    * வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்.

    * திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.

    * எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.

    * பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்.

    * வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல்.

    * வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல்.

    பல் வளர்ச்சி உதவும் உணவுகள்:

    பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அந்தசமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.

    ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

    குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

    எப்படி பராமரிப்பது:

    இந்த பால் பற்கள் குழந்தைக்கு முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும், இதன் காரணமாக குழந்தைக்கு கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போட்டு கடிக்கும். அந்த நேரத்தில் குழந்தைக்கு கேரட், ஆப்பிள் போன்றவற்றை கொரிக்க கொடுக்கலாம்.

    பல் முளைக்கும் நேரத்தில் குழந்தையின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஈறுகளில் வலி ஏற்பட்டு வலியின் காரணமாக காய்ச்சல் கூட ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது மிகவும் நல்லதாகும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு மெல்லிய மஸ்லின் அல்லது மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் பற்களை சுத்தம் செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு வகைகளை கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதற்கு பதிலாக அதிகளவு காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, குழந்தையின் உடல் நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தையின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி, பெரியவர்களின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இவற்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் பற்களை பராமரிக்கவும்.

    ×