search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guindy bank"

    கிண்டியில் உள்ள வங்கியில் கடன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யாமல் ரூ.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக 2 அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    சென்னை:

    கிண்டியில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில், திருவள்ளூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.20 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தது.

    இது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் கடன் தொகைக்கு தேவையான ஆவணங்களையும் தாக்கல் செய்தது. நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆவணங்களை வங்கி அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யாமல் கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுபற்றி வங்கியின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 வங்கி அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வங்கியின் துணை பொதுமேலாளர் சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து வங்கியின் பொது மேலாளர் ஜெயந்தி, மற்றும் இன்னொரு அதிகாரியான நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வங்கி கடன் மோசடி தொடர்பாக மேலும் 5 பேரும் சிக்கினர். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    முறைகேடாக கடன் வழங்கியதன் மூலம் ரூ.10 கோடி வரையில் வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tamilnews
    ×