என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government bus operation on new track"

    • கொல்லி மலை வட்டம் ஆலத்தூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆலேரி பட்டி கிராமத்தில் நாமக்கல், கொல்லிமலை, அறப்பளீஸ்வரர் கோவில் தம்மம்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
    • கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் எம்.பி. பங்கேற்று கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை வட்டம் ஆலத்தூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆலேரி பட்டி கிராமத்தில் நாமக்கல், கொல்லிமலை, அறப்பளீஸ்வரர் கோவில் தம்மம்பட்டி இடையே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் எம்.பி. பங்கேற்று கொடியசைத்து பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் அமர்ந்து பேருந்தில் பயணம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி, சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்.எல்.ஏ ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தானது காலை 4:15 மணிக்கு நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சேந்தமங்கலம் வழி யாக காலை 7:00 மணிக்கு அறப்பளீஸ்வரர் கோவிலை சென்றடையும். அதன் பிறகு காலை 7:15 மணிக்கு நத்துக்குளி பட்டி வேலிக்காடு வழியாக காலை 9 மணிக்கு தம்மம்பட்டி பஸ் நிலையத்தை சென்றடையும். மீண்டும் காலை 9.20 மணிக்கு தம்மம்பட்டி பஸ் நிலையத்திலிருந்து முள்ளுக்குறிச்சி, நத்துக்குளி பட்டி வழியாக பகல் 12:25 மணிக்கு அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு வரும்.

    தொடர்ந்து இரவு 7:30 மணி வரையில் கொல்லிமலை, தம்மம்பட்டி இடையே இந்த பஸ் இயக்கப்படும். அதன்பிறகு அறப்பளீஸ்வரர் கோவில் பஸ் நிலையத்திலிருந்து சேந்தமங்கலம், சோளக்காடு வழியாக இரவு 10 மணிக்கு நாமக்கல் வந்தடையும். தினசரி இந்த வழித்தடத்தில் தொடர்ந்து அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனை மலைவாழ் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கே. ஆர். என். ராஜேஷ் குமார் எம்.பி கூறினார். அப்போது போக்குவரத்து கழக நாமக்கல் கோட்ட மேலாளர் கணேஷ் குமார், கிளை மேலாளர் செங்கோட்டு வேலன் உட்பட பலர் உடன் இருந்தனர். 

    ×