search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Got SMS To Join BJP"

    பொருளை மாற்றி அனுப்பியதற்காக ப்ளிப்கார்ட்க்கு போன் செய்த கொல்கத்தா வாலிபருக்கு பாஜகவில் இணைந்ததாக உறுப்பினர் எண்ணுடன் குறுஞ்செய்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #FlipKart #BJP
    கொல்கத்தா:

    வீட்டில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தராமல் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க விரும்பிய கொல்கத்தா இளைஞர் ஒருவர், ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பாட்டில் இருந்துள்ளது.

    இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் பார்சலில் இருந்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்துள்ளார். ஆனால், தொடர்பு துண்டிக்கப்பட்டது. சில வினாடிகளில், “பாஜகவுக்கு வரவேற்கிறோம். உங்களது உறுப்பினர் எண் ...... உங்களது, பெயர் மற்றும் விலாசத்தை அனுப்பவும்” என குறுஞ்செய்தி வந்துள்ளது. 

    என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அவர் அதே எண்ணை தனது நண்பர்களுக்கும் அனுப்பி, போன் செய்ய செய்துள்ளார். அவரது நண்பர்களுக்கும் அதே போல குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது அனுபவத்தை பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட இந்த செய்தி வைரலாக பரவியது.



    இதற்கு விளக்கமளித்துள்ள அம்மாநில பாஜக தலைவர், “பார்சல் கவரில் கொடுக்கப்பட்ட எண் பாஜவுக்கு சொந்தமானதே. இந்த எண்ணை யார் வேண்டுமானாலும் பகிரலாம். ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கும் மாநில பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறியுள்ளார்.

    இந்த செய்தி இணையதளத்தில் பரவியதை அடுத்து, சப்தமில்லாமல் அந்த இளைஞருக்கு போன் செய்த ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையம், “உங்களுக்கு அனுப்பிய எண்ணெய் பாட்டிலை உபயோகப்படுத்தவும் அல்லது தூக்கி எறியவும். தற்போது எங்களிடம் ஒரு செட் இயர் போன் மட்டுமே உள்ளது. அதனை உடனே அனுப்புகிறோம். மற்றொரு செட்டுக்கான பணத்தை திரும்ப அனுப்பி விடுகிறோம்” என கூறியுள்ளது.

    மேலும், பார்சலின் மீது இருந்த எண் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியது. தற்போது உபயோகப்படுத்தப்படும் எண்ணுக்கு பதிலாக பழைய எண் ஒட்டப்பட்டுள்ளது என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 
    ×