என் மலர்
நீங்கள் தேடியது "gold smuggling seized"
பக்ரைனில் இருந்து வந்த விமானத்தில் பலூனுக்கு காற்றடிக்கும் கருவியில் 1 கிலோ தங்கம் கடத்திய சென்னை வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
பக்ரைனில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஜாகீர் உசேனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசில் பலூனுக்கு காற்றடிக்கும் கருவி ஒன்று இருந்தது. அதுபற்றி ஜாகீர் உசேனிடம் கேட்ட போது தனது சொந்த பயன்பாட்டிற்காக வாங்கியதாக தெரிவித்தார். ஆனாலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த கருவியை கழற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தங்கத்தை பதுக்கி கடத்தியது தெரிய வந்தது. அதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 1.3 கிலோ தங்கம் இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






