search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Manager Survey"

    • ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது.
    • ராமேசுவரத்தில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

    மதுரை

    தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் இன்று ராமேசுவரம் சென்றார். அங்குள்ள ரெயில் நிலையத்தில் ரூ.90 கோடி செலவில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள், ராமேசுவரம் -தனுஷ்கோடி புதிய ரெயில் பாதை திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராமேசுவரம் ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் 2 மாதத்தில் தொடங்கும். இந்த பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விட்டது. ஒப்பந்ததாரர் வரை படங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ராமேசுவரம் போன்ற பெரிய சுற்றுலா தலத்தில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடுக்கு தனித்தனி முனையங்கள் அமைய உள்ளன. அங்கு விசாலமான வாகன நிறுத்துமிடம், 2 மாடி ரெயில் நிலைய கட்டிடத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் அமைய உள்ளன.

    புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகள் அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்தில் முடிவடையும். ராமேசுவரம்- தனுஷ்கோடி புதிய ரெயில் பாதைக்கான நிலஆர்ஜித பணிகள் நடந்து வருகிறது. இதற்கு தேவையான நிலம் கிடைத்தவுடன் ஒப்பந்த புள்ளி கோரப்படும். ராமே சுவரம் வரையிலான மின்மயமாக்கல் பணிகள், உச்சிப்புளி கடற்படை விமானதள விரிவாக்கத்திற்கான ரெயில் பாதை மாற்றத்திற்கு பிறகு தொடங்கும் என்றார்.

    மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு நிர்வாக அதிகாரி ராஜேந்திர பிரசாத் ஜிங்கர், ரெயில் விகாஸ் நிகம் திட்ட அதிகாரி கமலாகர ரெட்டி, முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி, துணை முதன்மை பொறியாளர் ரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×