search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaurang Doshi"

    தயாரிப்பாளர் கவரங் தோஷி தன்னை அடித்து தாடையை உடைத்து, பாலியல் சித்ரவதை செய்ததாக பிரபல நடிகை புளோரா சைனி புகார் தெரிவித்துள்ளதுடன், காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். #FloraSaini #GaurangDoshi
    நடிகை புளோரா தமிழில் விஜயகாந்துடன் கஜேந்திரா படத்தில் நடித்தவர். கார்த்திக்குடன் குஸ்தி, திண்டுக்கல் சாரதி, நானே என்னுள் இல்லை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் குசேலன் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார். ஆஷா சைனி என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். 

    தயாரிப்பாளர் கவுரங் தோஷி தாக்கியதால் காயம் அடைந்த புகைப்படத்தை நடிகை புளோரா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

    ‘‘நானும், தயாரிப்பாளர் கவுரங் தோஷியும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றினோம். கடந்த 2007-ஆம் ஆண்டு காதலர் தினத்தில் என்னை அவர் கடுமையாக தாக்கினார். ஒரு வருடம் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் என்னை அடித்து சித்ரவதை செய்தார்.



    இதனால் எனது தாடையின் எலும்பு முறிந்தது. பயந்தபடி அவரை விட்டு விலகினேன். கவுரங் தோஷி அப்போது சக்தி மிக்கவராக இருந்தார். எல்லோரும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டனர். நான் சினிமாவுக்கு புதிதாக வந்தவள் என்பதால் அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அவரும் இதையே சொல்லி என்னை மிரட்டினார்.

    என்னை சினிமாவில் இருந்து ஒழித்துவிடுவதாக எச்சரித்தார். அவர் சொன்னபடியே சில படங்களில் இருந்து என்னை நீக்கினார்கள். புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் மறுத்தனர். இதனால் மனம் உடைந்து போனேன். எனது வாழ்க்கையே சிதைந்து போனது.’’

    இவ்வாறு புளோரா கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புளோரா வெளியிட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. #FloraSaini #ashasaini #GaurangDoshi 

    ×