என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas cylinder theft"

    ஆம்பூர் அருகே வீடுகளில் கியாஸ் சிலிண்டர் மற்றும் பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கடாம்பூர் பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் மற்றும் வெளியே உள்ள பாத்திரங்கள் திருடு போகின. இந்த நிலையில், வீடுகளுக்குள்ளும் புகுந்து பீரோவை திறந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகளில் உரிமையாளர்கள் இருக்கும்போதே லாவகமாக புகுந்து பொருட்களை திருடி செல்வது யாராக இருக்கும் என்பது மர்மமாகவே இருந்து வந்தது.

    இதற்கிடையே, கடாம்பூர் அறிவொளிநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் பொருட்கள் திருடப்பட்டன. தொடர் திருட்டு குறித்து அப்பகுதி மக்கள், உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடாம்பூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் பூபதி (38) என்பது தெரியவந்தது. பூபதியை போலீசார் கைது செய்தனர்.

    ×