search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gang trapped"

    அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி நாகராஜன் நோனாங்குப்பத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு கும்பல் நாகராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இந்த கொலை தொடர்பாக அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நாகராஜிக்கும், அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த லோகு என்ற லோகநாதனும் (30) முன்விரோதம் இருந்து வந்ததும் இதனால் நாகராஜை கூட்டாளிகளுடன் சேர்ந்து லோகநாதன் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகளான உதயகுமார் (28), முத்து (38) மணி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே நாகராஜ் கொலைக்கு உடந்தையாகவும் நாகராஜ் செல்லும் இடங்களை லோகநாதன் தரப்பினருக்கு தகவல் தெரிவித்த அரியாங்குப்பத்தை சேர்ந்த ஷிலா என்ற சத்தியசீலன் (22) என்பரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் நாகராஜ் கொலை தொடர்புடைய லோகநாதனின் தம்பி யுவராஜ் (27), மற்றும் கல்லூரி மாணவரான நவீன் என்ற நவீன்குமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    மரப்பாலம் சந்திப்பில் பதுங்கி இருந்த அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் குற்றப்பிரிவு போலீஸ்காரர்கள் வசந்தராஜா, மாஸ்ஆண்டனி ஆகியோர் கைது செய்தனர்.

    ×