என் மலர்
நீங்கள் தேடியது "gaja cylone effected"
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 40). இவர் அப்பகுதியில் 10 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கஜா புயலால் அவரது தென்னை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்தன.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த திருச்செல்வம் நேற்றிரவு திடீரென விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்செல்வம் இறந்தார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி கருப்பக்கோன் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 64). இவர் அப்பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்டவற்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கஜா புயலால் அவை அனைத்தும் சேதமடைந்து விட்டன. இதனால் மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு நெடுஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #gajacyclone






