என் மலர்
நீங்கள் தேடியது "FX College Students"
- எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- கல்லூரியின் 56 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் மீதான ரெட் ஹாட் லினக்ஸ் சான்றிதழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அந்நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் 100 சதவீத வேலைவாய்ப்பு உத்தரவாதம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான ரெட் ஹாட் நிறுவனத்துடன் பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ரெட் ஹாட் அகாடமியின் செயலில் உறுப்பினராகவும் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக கல்லூரியின் 56 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் மீதான ரெட் ஹாட் லினக்ஸ் சான்றிதழ் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதில் 8 மாணவர்கள் மற்றும் பேராசிரியர் பிரிஸ்கில்லா, ஏஞ்சல் ராணி ஆகியோர் ரெட் ஹாட் லினக்ஸ் நிறுவனத்தில் நன்கு பயிற்சி பெற்று சர்வதேச சான்றிதழை வெற்றிகரமாக பெற்றுள்ளனர். இந்த சர்வதேச சான்றிதழானது மாணவர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தை பெற உதவுகிறது. இதனால், மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இதற்காக பாடுபட்ட பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லுரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான்கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபாலராயன், கணினி துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர், மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.






