என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Frequent family problems between husband and wife"

    • குடும்ப பிரச்சனையால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், வானாபாடி அடுத்த வசந்தம் அவென்யூ குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (37), மாற்றுத்திறனாளி. இவருக்கும் ஆந்திர மாநிலம் காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி(30) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஆதிலட்சுமிக்கு, சங்கர் 2-வது கணவர் ஆவார். இதில் கணவன் - மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆதிலட்சுமி, வீட்டில் யாருமில்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதிலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×