search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open 2018 finalRafael Nadal vs Dominic Thiem"

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இன்று மாலை டொமினிக் தீம்-ஐ எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால், 11-வது முறையாக பட்டம் வெல்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FrenchOpen #RafaelNadal
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஏழாம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.

    இதில் நடால் வென்று பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 11-வது முறையாக கைப்பற்றுவாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே இந்தப் போட்டியில் 10 முறை பட்டம் வென்று (2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017) சாதனை படைத்து இருந்தார்.

    இதில் பட்டம் வென்றால் 2-வது நபர் என்ற பெருமையை நடால் பெறுவார். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்க்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 11 முறை வென்று இருக்கிறார்.


    ஒட்டு மொத்தத்தில் 17-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்திலும் நடால் உள்ளார். அவர் அமெரிக்கா ஓபன் பட்டத்தை 3 முறையும் (2010, 2013, 2017), விம்பிள்டனை 2 தடவையும் (2008, 2010), ஆஸ்திரேலிய ஒபனை ஒரு முறையும் (2009) வென்று இருந்தார்.

    ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று (விம்பிள்டன் 8, ஆஸ்திரேலிய ஓபன் 6, அமெரிக்க ஓபன் 5, பிரெஞ்சு ஓபன் 1) முதலில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக நடால் 2-வது இடத்தில் உள்ளார்.

    நடாலின் 17-வது பட்டம் மற்றும் 14-வது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை தடுத்து நிறுத்தும் வேட்கையில் டோமினிக் தீம் உள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தில் நடால் 6 முறையும், தீம் 3 தடவையும் வெற்றி பெற்றனர்.

    டொமினிக் தீம் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே அவரது சிறப்பான நிலையாகும். அவர் நடாலை வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    இறுதிப் போட்டி இந்திய நேரப்படி 6.30 மணிக்கு தொடங்குகிறது. #FrenchOpen #FrenchOpen2018 #RafaelNadal #DominicThiem
    ×