என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Donation Bond"

    • நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • விழாவில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி, விவசாய சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    சட்டக் கவசம் அமைப்பு சார்பில் 4-வது ஆண்டு தொடக்க விழா, ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நெருப்பெரிச்சல் கொங்கு கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மருதமுத்து, சிவன்ராஜ், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி திருமுருகன் ரியல் எஸ்டேட் அண்டு புரமோட்டர்ஸ், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுருகன் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட திருமுருகன் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ஜி.மோகனுக்கு கல்வித் தந்தை மற்றும் சமூக சேவகர் விருது, மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜிக்கு மக்கள் சேவைக்கான விருது உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான மாரிமுத்து-சுமதி தம்பதிக்கு திருமுருகன் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் ஜி.மோகன் 1½ சென்ட் இலவச இடத்திற்காக தானக்கிரைய பத்திரத்தை வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட தம்பதி மோகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். விழாவில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி, விவசாய சங்க தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×