என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest Officer takes charge"

    • சச்சின் போஸ்லே துக்காராம், சென்னை உதவி வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • கவுதம், நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வந்த சச்சின் போஸ்லே துக்காராம், சென்னை உதவி வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீலகிரியில் பணியில் சேர்ந்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றி வந்த கவுதம், நீலகிரி மாவட்ட வன அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரது சொந்த ஊர், கரூர் மாவட்டமாகும். இந்த பணியிட மாறுதல் உத்தரவு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கவுதம், நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×