search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for cleanliness and hygiene"

    • தமிழ்நாடு அரசால் ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.
    • கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சியில் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    நம்ம ஊரு சூப்பர்

    தமிழ்நாடு அரசால் 'நம்ம ஊரு சூப்பரு" என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது, கிராம சமுதாயத்தில் பாதுகாப்பான சுகாதாரம் முறைகள் கடைபிடித்தல், குப்பை தரம் பிரித்தல், கழிவுகளை குறைத்தல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

    பாதுகாப்பான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவ கழிவு மேலாண்மை செயல்பாடு, பொது வெளியில் குப்பை–கள் போடுவதை தடுத்தல், நீர்நிலை பாதுகாத்தல் மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும்.

    அதன்படி வருகின்ற 2-ந் தேதி வரை பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சுத்தம் செய்தல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம், குடிநீர், கழிவு மேலாண்மை மற்றும் தன்சுத்தம் குறித்து விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பி–னர்கள், சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் குப்பை தரம் பிரித்தல் குறித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும், 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்தல் குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சுத்தம் மற்றும் பசுமையான கிராமம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இறுதியாக கிராம சபாவில் தீர்மானம் இயற்றுதல் போன்ற நடவடி–க்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அந்த வகையில், இன்று சிறப்பு முகாமின் முதற்கட்ட–மாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி துடுப்பதி குக்கி–ராமத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்ப–ட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.

    தொடர்ந்து, துடுப்பதி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தினையும் மற்றும் அதே இடத்தில் அமைந்துள்ள நர்சரியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ×