என் மலர்
நீங்கள் தேடியது "Footsteps. Exhibitions of agricultural implements"
- கால் நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளின் கண்காட்சி
- 2 நாட்கள் நடைபெறுகிறது
ஆற்காடு:
தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்ட மைப்பு சார்பில் இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய ஆற்காடு அரிசி, விதைத்திருவிழா சனிக்கிழமை தொடங்கி இரண்டுநாள்கள் நடைபெறுகிறது. இதில் பாரம்பரிய விதைநெல், அரிசி வகைகளின் சந்தை, கிராமிய திருவிழா, கால் நடைகள் மற்றும் விவசாயக் கருவிகளின் கண்காட்சிகள் நடைபெறுகிறது.
முதல் நாள் விழாவில் வேலூர் நருவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத், உயிராற்றல் மேலாண்மைப் பயிற்சிமைய பயிற்றுநர் நவநீதகிருஷ்ணன், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வி.பி சிவக்கொழுந்து, விஐடி பல்கலைக் கழகத் துணைத் தலைவர் ஜி.வி. செல்வம், சித்த மருத்துவர் கு.சிவராமன், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் அஹமது இஸ்மாயில், எஸ் . பிரிட்டோராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் விமல் நந்தகுமார், கே.எம்.பாலு, ஏ.எம். உதயசங்கர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.






