என் மலர்
நீங்கள் தேடியது "Flowers in short supply"
- தினமும் நாமக்கல் மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டத்திற்கும் 6 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.
- தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை இப்பகுதியில் நல்ல மழை பெய்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சுற்றி அலங்காநத்தம், கோம்பை, செவ்வந்திப்பட்டி, நாவலடிப்பட்டி உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தினமும் நாமக்கல் மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டத்திற்கும் 6 டன் மல்லிகை பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு வரை இப்பகுதியில் நல்ல மழை பெய்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. காலை நேரங்களில் அதிக அளவில் பனி மூட்டமாக காணப்படு–கிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றன.
இந்நிலையில் பனிப் பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உற்பத்தி பாதியாக குறைந்து உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பூக்களின் அளவு கணிசமாக குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது.
இது குறித்து மல்லிகை பூ விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் இருந்து தினமும் 6 டன் மல்லிகை பூக்கள் ஏலத்துக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், இப்போது அதிகரித்துள்ள பனிப் பொழிவால், பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு 3 டன் பூக்கள் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது. இனிவரும் நாட்களில் மேலும் பூக்கள் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்றனர்.






