search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flowers Farmers"

    • பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • நல்ல விலை இருந்தும் லாபம் பெற முடியவில்லை என்றார்.

    உடுமலை :

    உடுமலை சுற்று வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள செண்டுமல்லி, கோழி கொண்டை பூக்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி செல்லகுமார் கூறுகையில், சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது செண்டு மல்லி கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கும், கோழி கொண்டை 40 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும். ஆனால் உடுமலை சுற்றுவட்டாரத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் பனி காரணமாக செடிகள் காய்ந்துள்ளன.

    இதனால் பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. நல்ல விலை இருந்தும் லாபம் பெற முடியவில்லை என்றார்.

    ×