search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flooding in the Kottakudi River"

    • கனமழை காரணமாக போடியின் முக்கிய நீர் ஆதாரமான கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலை போடி அருகே உள்ள குரங்கணி பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக போடியின் முக்கிய நீர் ஆதாரமான கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் போடி அருகே உள்ள அணைப் பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

    பாதுகாப்பு காரணங்கள் கருதி பொதுமக்கள் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொட்டகுடி ஆற்றுப்பகுதியில் பொதுமக்கள் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக ராஜவாய்க்கால் மூலம் குளங்களுக்கு செல்லும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நீண்ட நாட்களாக மழை இல்லாத நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து போடி பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×