என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flooding in the Koja River"

    • பண்ணைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்து சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக வத்தலகுண்டு-கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள மூலையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல், வேடசந்தூர், பழனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல் மலை கிராமங்களிலும் கன மழை பெய்து வருகிறது. பண்ணைக்காடு, மச்சூர், வடகரைபாறை, மூலையாறு, பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.

    இதனால் மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக கொட்டுகிறது. பண்ணைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்து சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வத்தலகுண்டு-கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள மூலையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பழனி 8, சத்திரப்பட்டி 24.4, நிலக்கோட்டை 6 மி.மீ. மழைளவு பதிவாகி உள்ளது.

    ×